
காரைதீவு காரையடிப் பிள்ளையார் ஆலயத்தின் களஞ்சிய கட்டடத்திற்கான அடிக்கல்நாட்டுவிழா இன்று திங்கட்கிழமை விநாயக சதுர்த்தி தினத்தன்று நடைபெற்றது.
இதற்கான 5 லட்ச ருபா நிதியொதுக்கிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.பி.பியசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
ஆலய குருக்கள் சிவஸ்ரீ மகேஸ்வரக் குருக்கள் எம்.பிக்கு காளாஞ்சி வழங்கினார்.
பாராளுமன்ற உறுப்பினர் எச்.பி.பியசேன அடிக்கல்நட்டு உரையாற்றினார்.
ஆலய ஆலோசகர் ந.லோகராஜூ விளக்கவுரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment