Monday, September 9, 2013

விநாயகசதுர்த்தியன்று காரைதீவில் பிள்ளையார் ஆலய கட்டடத்திற்கு அடிக்கல்நாட்டுவிழா

காரைதீவு  காரையடிப் பிள்ளையார் ஆலயத்தின் களஞ்சிய கட்டடத்திற்கான அடிக்கல்நாட்டுவிழா இன்று திங்கட்கிழமை  விநாயக சதுர்த்தி தினத்தன்று நடைபெற்றது.
இதற்கான  5 லட்ச ருபா நிதியொதுக்கிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.பி.பியசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 

ஆலய குருக்கள் சிவஸ்ரீ மகேஸ்வரக் குருக்கள் எம்.பிக்கு காளாஞ்சி வழங்கினார்.
பாராளுமன்ற உறுப்பினர் எச்.பி.பியசேன அடிக்கல்நட்டு உரையாற்றினார்.
ஆலய ஆலோசகர் ந.லோகராஜூ விளக்கவுரை நிகழ்த்தினார்.